Header Ads



இலங்கைக்கு செல்ல வேண்டாம் மாலைதீவு எச்சரிக்கை


மாலைதீவு பிரஜைகளுக்கு, இலங்கைக்கான விஜயங்களை குறைத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு சமூக சுகாதார மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவ்வாறு விஜயத்தினை குறைத்து கொள்ள கூறுவதற்கான காரணமாக இலங்கையில் கடந்த இரண்டு மாத காலங்களுள் AH1N1 இன்புலுவன்ச வைரஸ் தொற்றுக்கு 300 பேர் உள்ளாகியிருந்தமை மற்றும் 22 பேர் உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும், இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும், அவர்கள் நாடு திரும்பிய பின்னர் வைரஸ் தொற்று தென்படுமாயின் உடனடியாக மருத்துவரை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அண்மைக் காலத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் வைரஸ் தொற்று ஏற்படுவதாக இலங்கை அரசாங்கம் ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தது. 

No comments

Powered by Blogger.