யாழ் பல்கலைக்கழகத்திற்கு 1,535 மாணவர் அனுமதி
2010 - 2011ம் பல்கலைக்கழக கல்வியாண்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 1535 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்களென பல்கைலக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்கான மேலதிக செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு 275 மாணவர்களும், ராமநாதன் நுண்கலைக் கல்லூரிக்கு 195 மாணவர்களும் அனுமதிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் 22,500 பேர் அனுமதிக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Post a Comment