அமெரிக்காவை பலிவாங்கும் கியூபா
விக்கிலீக்ஸின் லட்சக்கணக்கான ஆவணங்களை, கியூபா அரசு அனுமதியுடன் ஸ்பானிஷ் மொழியில், மொழிபெயர்த்து வெளியிட "கியூபாடிபேட்' இணையதளம் முடிவுசெய்துள்ளது.
கியூபாவில், ஸ்பானிஷ் மொழி பெரும்பாலானோரால் பேசப்பட்டு வருகிறது.ஏற்கனவே "ரெசோன்ஸ் டி கியூபா' இணையதளம், சிறிது மொழிபெயர்ப்பு செய்து, சில விக்கிலீக்ஸ் ஆவணங்களை இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து "கியூபாடிபேட்' இணையதளம் கூறியதாவது:
கியூபா அரசுக்கு எதிராக விஷம பிரசாரங்களை இணையதளம் வழியாக, அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இன்றைய தலைமுறையினரை கியூபாவுக்கு எதிராக திருப்பிவிடுவதே அதன் நோக்கம். அமெரிக்க பிரசாரத்திற்கு எதிராக, நாங்கள் ஸ்பானிஷ் மொழியில் "விக்கிலீக்ஸ்' ஆவணங்களை மொழிபெயர்த்து வெளியிடுகிறோம். இதைப்படிக்கும் கியூபா இளைஞர்கள் அமெரிக்காவின் உண்மை முகத்தை தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment