இவ்வருடம் யாழ்ப்பாணத்தை தரிசித்த 28 இலட்சம் தென்பகுதி சுற்றுலாப் பயணிகள்
இந்த ஆண்டில் சிறிலங்காவின் தென்பகுதியில் இருந்து சுமார் 28 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு இலட்சம் பேர் ஆண்டு இறுதி விடுமுறையைக் கழிக்க யாழ்ப்பாணம் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டில் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முப்பது இலட்சமாக அதிகரிக்கும் என்றும் அவர் டமேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிய போர்ச்சூழலால் தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையான தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் விடுமுறையைக் கழிப்பதற்காகவும் தல யாத்திரையாகவும் யாழ்ப்பாணம் செல்ல ஆரம்பித்தனர்.
பாடசாலை விடுமுறைக் காலங்களில் குறிப்பாக ஏப்ரல், ஓகஸ்ட், டிசம்பர் மாதங்களிலேயே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Post a Comment