உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவரின் உடனடி கவனத்திற்கு
பல்கைலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தாம், உயர்தரத்தில் கற்ற பிரிவில் உள்ள அனைத்துப் பாடங்களுக்கும் விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உயர் பாடங்களுக்கு மாத்திரமே விண்ணப்பிப்பதால் பிரச்சினைகள் ஏற்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் ஜனவரி 14ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பல்கலைக்கழக விண்ணப்பப் படிவங்களுக்கான கையேடு கடந்த வாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனுப்பப்படும் விண்ணப்பங்களில் மாற்றங்கள் செய்வதற்கு மாணவர்களுக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை நடைபெற்று முடிந்து இரு வாரங்களுக்குள் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment