Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக ஏற்பாட்டில் பெப்ரவரியில் 3 நாள் சர்வதேச ஆய்வரங்கு


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19,20,21 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

 யுத்தத்தின் பின்னரான பொருளாதார அபிவிருத்தி விஞ்ஞானம்,தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்தை நோக்கி எனும் தலைப்பில் இடம்பெறவுள்ள ஆய்வரங்கிற்கு 100 இற்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆய்வுக்கட்டுரைகளும் 100 இற்கு மேற்பட்ட உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் அரச நிறுவனங்களினது ஆய்வுக் கட்டுரைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதோடு,60 இற்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் விரிவுரையாளர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 சமூக விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகமும் முகாமைத்துவமும், மொழி, சமயம், கலாசாரம், இயற்கை வளங்களும், நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளன.

 ஆய்வுப் பத்திரங்களை சமர்ப்பிக்கும் இறுதித்தினமாக ஜனவரி 15 ஆம் திகதியாகும். அன்றைய தினமே பதிவுகளும் இடம்பெறவுள்ளன. மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையத்தள முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறு அல்லது ஆய்வரங்கம் செயலகத்துடன் தகவல்களை பெறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பீடங்களின் தனித்தனி ஏற்பாட்டில் இதற்கு முன்னர் இரண்டு சர்வதேச ஆய்வரங்குகள் இடம் பெற்றுள்ளதுடன், பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச ஆய்வரங்கு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.