Header Ads



வறுமையின் பிடியில் பலஸ்தீன் முஸ்லிம் பெண்ணின் பரிதாபம்

பாலஸ்தீனத்தில் உள்ள காஷா சிட்டி நகரைச் சேர்ந்தவர் நஜ்வா அபு அம்ரா. இவருக்கு 2 மகன்கள் உள் ளனர். இந்த நிலையில் அவர் விபசாரம் செய்ததாக போலீ சாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் காஷாவில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். இங்கு 2 அறைகள் மட்டுமே உள்ளன. அதில் 19 பெண்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
தான் ஏன் விபசாரத்தில் ஈடுபட்டேன் என்பதை அங்குள்ள பெண்களிடம் நஜ்வா தெரிவித்தார். தனது குழந்தைகளை நினைத்து கண்ணீர் வடித்தபடி இருக்கிறார். அவரது கணவர் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவர்.
 
எனவே, வேலைக்கு செல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால், பணத்துக்காக கணவரே அவரை மற்ற ஆண்களுடன் பழக செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார். அந்த பணத்தில்தான் இவர்களது குடும்ப வாழ்க்கை சுழன்றது.
 
இதற்கிடையே அவரது ஒரு குழந்தையின் காது கேட்காது. தற்போது ஜெயிலில் இருப்பதால் எனது குழந்தைகளை கணவர் சரிவர கவனித்துக் கொள்ள மாட்டார். வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு சென்று விடுவார்.
 
இதனால் எனது குழந்தைகளின் கதி அதோ கதிதான். நான் வேண்டுமென்றே விபசாரத்தில் ஈடுபடவில்லை. கணவர், குழந்தைகளை காப்பாற்றதான் அதில், ஈடுபட்டேன் என்று புலம்பி வருகிறார்.
 
கைது செய்யப்பட்ட நஜ்வா அபு அம்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நன்னடத்தைக்காக அவரை பெண்களுக்கான பயிற்சி மற்றும் மறுவாழ்வு மையத் தில் 30 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதை தொடர்ந்து அவர் மீண்டும் காஷா பெண்கள் சிறையில் உள்ள மையத்தில் அடைக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.