ஈரானில் போதை மருந்து கடத்தல்காரர்கள் ஐவருக்கு தூக்கு
ஈரானில் குற்றவாளிகளுக்கான தண்டனை சட்டம் கடுமையாக உள்ளது. குறிப்பாக கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் போன்ற வைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவர்களில் 3 பேரின் இனிஷியல் ஏ.ஏ.எச்.எம். என்றும் ஒருவரின் இனிஷியல் ஜே.ஜே. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று, ஒரு பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நபருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தெக்ரானில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டது.

Post a Comment