Header Ads



வெலிகந்தயில் படகு கவிழ்ந்ததில் மூவர் பலி இருவரை காணவில்லை

பொலன்னறுவை, வெலிக்கந்த மகசென் வெவ ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இறந்த மூன்று பெண்களின் சடலம் வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்த வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இச்சம்பவத்துக்குள்ளானோர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், காணமல் போனோரை தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.