புதிதாக 1000 பாடசாலைகள் கல்வி கட்டமைப்பிலும் மாற்றம்
பிரபல பாடசாலைகளில் கல்வி கற்க மாணவர்கள் போட்டி போட்டுவருவதனால் எதிர்வரும் 3 வருடங்களுக்குள் ஆயிரம் பாடசாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இதன்மூலம் க.பொ.த சா/த பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி பெறாத மாணவர்களுக்கு கா.பொ.த உ/த இணைந்து கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படுத்தகூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவதற்கான யோசனைத் திட்டம் ஒன்று கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2011 ஆம் ஆண்டுக்குள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், கல்வி முறை மற்றும் கல்விபொதுத்தராதர உயர்தர பாடவிதானம் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சின் செயலாளர், எச் எம் குணசேகர இந்த தகவலை இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தெரிவித்துள்ளார் இதற்கான ஒழுங்கமைப்புகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment