நான் தமிழ் கற்றுக் கொள்ளப்போகிறேன்...

நான் தமிழ் கற்றுக் கொள்ளப்போகிறேன். தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேச விரும்புகிறேன் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தெரிவித்தார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திப்பதற்காக மதுரை சென்றுள்ள அவர் நேற்று மாலை இளைஞர்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இதன்போது காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இந்தியாவின் அடுத்த பிரதமரென வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி நான் தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறேன் எனக்கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment