மரக்கறிகளின் விலையும் உயர்வு
இலங்கையில் தற்போது மரக்கறி வகைகளின் விலைவாசியும் உயர்ந்துள்ளதாகவும், ஏதேனும் ஒருவகை மரக்கறியினை ஒரு கிலோ கிராம் 100 ரூபாவிற்கு குறைவாக காணமுடியாத நிலை உள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை 30 தொடக்கம் 50 சதவீதம் உயர்வடைந்து காணப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் கிரிஸ்டி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், சீரற்ற காலநிலையால் மரக்கறி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையே இந்த விலை அதிகரிப்பிற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைக்கு தீர்வாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து அவற்றை கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் கோப் சிட்டிக்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment