இலங்கையில் விபத்துக்கள் அதிகரிப்பு ! தினமும் ஐவர் உயிரிழப்பு !!
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டில் அதிகம் மரணங்கள் ஏற்படுவது வீதி விபத்துக்களினால் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மனோ விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் நாளாந்தம் குறைந்தது 5 பேர் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது, மற்றும் வீதிகளில் பொது மக்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவது என்பன குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
கடந்த காலங்களில் டெங்கு நுளம்பை ஒழிக்க மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டது போன்று வீதி விபத்துக்களை குறைப்பதற்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மனோ விஜேரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment