யாழ்ப்பாணத்தில் கொலை, கொள்ளை மக்களிடையே பெரும் அச்சம்
யாழ், குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
மூன்று வாரங்களுக்குள் யாழ், குடாநாட்டில் மூன்றாவது கொலை பதிவாகியுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து சூட்சமமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த செல்வன் என அழைக்கப்படும் 21 வயதுடைய மகேந்திரசெல்வம் திருவருட்செல்வன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் ஆடிப்போயுள்ளனர்.
Post a Comment