எச்1, என்1 ஸ்வைன் புளூ யாழ்ப்பாணத்திலும் பரவல்
எச்1,என்1 ஸ்வைன் புளூ காய்ச்சல குடாநாட்டிலும் பரவும் அபாயம் காணப்படுவதால் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரப் பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தென்பகுதியிலிருந்து வருபவர்கள் மூலம் இந்த நோய் பரவலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய் தற்போது தென்பகுதியில் தீவிரமாகப் பரவி வருவதுடன் இரு மாதங்களில் 22 பேர் மரணமடைந்துள்ளனர். 300 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான மழை, குளிரான காலநிலை என்பவற்றால் இந்த நோயின் வைரஸ் பரவுதற்கு துணையாக இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெற்கிலிருந்து உல்லாசப் பயணம் மேற்கொண்டு வருபவர்கள் தங்கும் விடுதிகள், ஹோட்டல்களை சுத்தமாக பேணுமாறும், கிருமி நாசினி கொண்டு கழுவுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கமாகக் காணப்படும் இடங்களில் நிற்பதைத் தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெங்குக் காய்ச்சலும் தெற்கில் இருந்து வந்தவர்களால் குடாநாட்டில் பரவியதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.
Post a Comment