டேவிட் கேமரூனின் தூக்கத்தை குலைக்கும் முஸ்லிம் போராளிகள்
ஆப்கானிஸ்தானிலிருக்கும் பிரித்தானியப் படையினரின் இன்னல்களைக் கண்டு மிகவும் மனமுடைந்து பல நேரங்களில் தூங்காமல் அதைப் பற்றியே சிந்தித்து வருவதாக பிரதமர் டேவிட் கேமரூன் திடிரென உருகியுள்ளார்.
பிரித்தானிய படை வீரர்களுக்கு நேற்று அவர் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் ஒவ்வொரு முறையும் ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி கிடைக்கும் போதெல்லாம் இந்த தியாகம் தகுதியானதுதானா என்ற கேள்வியே தனக்கு எழுவதாகக் கூறியுள்ளார்.
ஆப்கனில் இருக்கும் பிரிட்டன் படைகளை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதே தன்னுடைய மிக முக்கியமான பணியாக கருதுவதாகவும் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் எழுதியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இந்த வருடத்தில் மட்டும் 102 பிரிட்டன் ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment