Header Ads



பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு 40 பேர் பலி 70 பேர் காயம்


பாகிஸ்தானில் உணவு விநியோக மையத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். வடமேற்கு பாகிஸ்தானில் பைஜூர் பகுதியில் சர்வேதசே உணவு விநியோக மையம் உள்ளது. ஐ.நா., சார்பில் இந்த மையம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் வரை அவர்களுக்கு தேவையான உணவு பொருள் மற்றும் துணிமணிகள் பெற்று சென்று வருகின்றனர். 

வழக்கம் போல் இங்கு உணவு பெறுவதற்காக பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் மனித வெடிகுண்டாக வந்த ஒருவர் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார். பெரும் குண்டுவெடிக்கும் சப்தம் கேட்டு பலர் அலறியபடி ஓடினர். சம்பவம் நடந்த இடத்திலேயே 40 பேர் உயிரிழந்தனர். காயமுற்ற 70 க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட  அமைப்பினர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.யாரும் பொறுப்பேற்கவில்லை.

No comments

Powered by Blogger.