Header Ads



வன்னி மாவட்ட புதிய எம்.பி.யாக பாரூக்

வன்னி மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி முத்தலிப்பாவா பாரூக் தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளார். 

கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நூர்தீன் மசூர் அண்மையில் காலமானதையடுத்தே அவரது இடத்திற்கு புதிதாக முத்தலிப் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவரது நியமனம் தொடர்பாகத் தேர்தல் திணைக்களம் விசேட வர்த்தமானி அறிவித்துள்ளதுடன், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் இவரது நியமனம் குறித்து கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

 ஜனவரி மாதம் 4 ஆம், 5 ஆம், 6 ஆம் திகதியில் ஏதாவதொரு தினத்தில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து சத்தியப்பிரமாணம் செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.