பேசும் படங்கள். பகுதி 19
இஸ்ரேலுக்கு எதிராக புனிதப் போராட்டத்தில் (ஜிஹாத்) ஈடுபடும் அல்-குவாசம் அமைப்பை சேர்ந்த முஸ்லிம் போராளிகள் காஸா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் முகத்தை துணியால் மூடி இருந்தனர்.
இலங்கை, பொலநறுவை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பௌத்த விகாரையிலிருந்து பௌத்த மதகுரு ஒருவர் பிரதான வீதிக்கு சிறு படகை பயன்னடுத்தி பயணிப்பதை காண்கிறீர்கள்.
அரபு நாடுகளின் பெட்ரோலிய ஏற்றுமதியின் பொது செயலர் அப்பாஸ் அலி நகி(இடது), யுனைடெட் அரபு எமிரேட்ஸின் ஆயில் அமைச்சர், எகிப்து கெய்ரோவில் நடந்த கலந்தாய்வு சந்திப்பில் பேசி கொண்டனர்.
பாலஸ்தீனம், பெத்தலஹேமில் அதிபர் முகமது அப்பாஸ்(இடது), கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
ஈராக் ஆயில் அமைச்சர் அப்துல் கரிம், கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கலிபோர்னியாவின் கவர்னர் அர்னால்டு சுவாஸ்நேக்கர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
நோபல் பரிசு பெற்ற லியூஷியாபோவை விடுதலை செய்யக்கோரி ஹாங்காங்கில் உள்ள சீன தூதரக அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது மதில் சுவர் ஏறி குதிக்க முயன்றவரை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி
சீனாவில் உள்ள ஹார்பின் நகரில் உலக அளவிலான ஐஸ் மற்றும் பனிக்கட்டி சிற்ப கண்காட்சி வருகிற ஜனவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணியில் ஊழியர் ஈடுபட்ட காட்சி.
டவுனில் படிச்சாவது நீச்சல் குளத்தில் கத்துக்குவோம். நாங்கள் கிராமம் தானே, சுகாதாரமற்ற தண்ணீரில் தான் கத்துக்க வேண்டியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காததாலும், கூலி உயர்வாலும் இயந்திரம் மூலம் நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இடம்: பேரம்பாக்கம்.
ஒரு வீலை கழற்றி விட்டு, விளையாட்டாய் விபரீதத்தை உணராமல் டிராக்டரை ஓட்டி செல்வது விபத்தை வரவேற்காதா? இடம்: சேலம் ரோடு, தர்மபுரி.












Post a Comment