Header Ads



முஸ்லிம் போராளிகளின் திட்டம், டென்மார்க் தப்பியது



முஹம்மது நபி (ஸல்) குறித்து சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டதாக டென்மார்க் செய்தித்தாள் நிறுவனம் ஒன்றை தகர்க்கும் முயற்சியில் முஸ்லிம் போராளிகள் நால்வர் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீஸ் நடத்திய தேடுதல் வேட்டையில் தெரியவந்துள்ளது. 

 சந்தேகத்தின் பேரில் நால்வரையும் புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சதித்திட்டம் தீட்டிய நால்வரில் மூவர் சுவீடன் குடியுரிமை பெற்றவர்கள் என்று டென்மார்க் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெய்லி ஜில்லன்ட்ஸ் - போஸ்டன் எனப்படும் செய்தித்தாள் நிறுவனத்தின் தலைமையகத்தை தகர்க்க எண்ணிய இவர்களின் சதித்திட்டம் சுவீடன் மற்றும் டென்மார்க் அதிகாரிகளின் ஒத்துழைப்பாலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் டென்மார்க் புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

முஸ்லிம் போராளிகளின் இந்ததிட்டம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காவிட்டால் மிகப் பெரும் உயிரிழப்பை சந்திக்க நேர்ந்திருக்கும் என டென்மார்க் புலனாய்வு அமைப்பின் தலைமை அதிகாரி ஜேக்கப் ஸ்சர்ப் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.