8 வயது சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த தாய் கைது
தாயால் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்த 8 வயது சிறுவனை சிலாபம் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சிறுவனிடமிருந்து துன்புறுத்தியது தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனின் வாயிற்கு அருகில் பலதடவைகள் சூடு வைக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பொலிஸ் பிரிவினர் வழங்கிய தகவலை அடுத்தே குறித்த தாயார் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தாயார் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment