வட மாகாணத்தில் புதிதாக 72 வங்கிக் கிளைகளை திறக்க தீர்மானம்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக 136 வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
தற்போது இந்த இரு மாகாணங்களிலும் 59 வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன. இதனைத் தவிர கிழக்கு மாகாணத்தில் 64 கிளைகளையும் வடக்கில் 72 வங்கிக் கிளைகளையும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு மாகாணங்களிலும் வெளிநாட்டு வங்கிகளும் தமது கிளைகளைத் திறப்பதற்காக மத்திய வங்கியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.

Post a Comment