Header Ads



மீள்குடியமர்ந்த முஸ்லிம்களுக்கு 6 மாத நிவாரணம் - யாழ்.அரச அதிபர்

யாழ் மாவட்டத்தில் மீள் குடியமர்ந்த 708 குடும்பத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 942 முஸ்லிம் மக்க ளுக்கு 6 மாதத்திற்கான உலர் உணவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும் என யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 உலக உணவுத்திட்டத்தின் கீழ் முஸ்லிம் மக்களுக்கு உலர் உணவு வழங்கத் தீர்மானித்து உள்ளோம். இதில் 678 குடும்பங்கள் யாழ்.நகரிலும், சாவகச்சேரியில் 76 குடும்பங்களும், வேலணையில் இரண்டு குடும்பங்களும் உள்ளடங்குகின்றன என்றார்

No comments

Powered by Blogger.