Header Ads



பேசும் படங்கள். பகுதி - 18

துருக்கியின் அதிபர் அப்துல்லா குல்(மத்தியில்), ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்ஷாய்(இடது), மற்றும் பாகிஸ்தானின் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, துருக்கி இஸ்தான்புலில் பொருளாதாரம் மற்றும் எல்லை பற்றிய விவகாரம் குறித்து பேச ஒன்று கூடினர்.

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் கார்களை பனிக்கட்டிகள் மூடியிருக்கும் காட்சி.

வடகொரியாவின் தலைவர் இரண்டாம் கிம் ஜா (கண்ணாடி அணிந்தவர்), ஹுசோயனில் உள்ள தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.

பிரேசில் துணை ஜனாதிபதி ஜோஸ் அலென்கர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டில்மா ரூசப் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.விரைவில் குணம் அடைய முத்தமிட்டு வாழ்த்தினார்.






"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் ஆஜராவதற்காக, டில்லியிலுள்ள சி.பி.ஐ., தலைமையகத்திற்கு முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா வந்தார்.

மும்பையில் பாகிஸ்தான் ஊடுருவதைத் தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தாஜ்மகால் ஓட்டல் அருகே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை போலீசார் சோதனையிட்ட காட்சி.


அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.மாணவ-மாணவிகள் வகுப்பறையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பாடம் படித்த காட்சி.

என்னதான் சாலை விதி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இது போன்ற விதி மீறலும் தொடரதான் செய்கின்றன.போலீசாரின் கடும் நடவடிக்கையால் மட்டுமே இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் . 


ஐஸில் செதுக்கப்பட்ட சில சிற்பங்கள்.

தன்னம்பிக்கையே வெற்றிக்கு வித்திடுகிறது.







No comments

Powered by Blogger.