500 அறைகளைக் கொண்ட ஹோட்டல் காலிமுகத்திடலுக்கு அருகில் கட்டப்படும்

கொழும்பில் காலிமுகத்திடலுக்கு அருகில் 500 அறைகளைக் கொண்ட ஏழு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைக்க ஹொங்கொங் "ஷன் கிரிலா' நிறுவனத்துக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கை முதலீட்டுச் சபைக்கும் ஷன்கிரிலா நிறுவனத்துக்குமிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் 10 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனம் இந்த ஹோட்டலை அமைப்பதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment