24 மணித்தியால விபத்துக்களில் 389 பேர் காயம்
நத்தார் பண்டிகை ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் பண்டிகைக்கால அவசர விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெளிநோயாளர் பிரிவில் 298 பேர் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாந் ஆரியவங்ச தெரிவித்தார்.
தற்போதுவரை சுமார் 91 பேர் பல விபத்துக்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் பண்டிகைக்கால விபத்துக்களில் அதிகரிப்புக்கள் காணப்படுவதாக பிரசாந் ஆரியவங்ச கூறியுள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பட்டாசு வெடிபொருட்களின் பாவனையால் காயமடைந்த இருவரும், மோதல்கள் காரணமாக காயமடைந்த மூவரும் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment