பன்றிக் காய்ச்சல் தொடருகிறது 22 பேர் உயிரிழப்பு
பன்றிக்காச்ய்ச்சல் எனப்படும் ஏ எச் 1 என் 1 வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 9 பேர் கடந்த வாரத்தில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 342ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 105 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் 23 பேரும், கண்டி மாவட்டத்தில் 19 பேரும், காலி மாவட்டத்தில் 11 பேரும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 10 பேரும் ஏ எச் 1 என் 1 வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment