தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 2009/2010 கல்வியாண்டில் 651 மாணவர் அனுமதி
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்திற்கு 2009/2010 கல்வியாண்டுக்கென 651 புதிய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் ஏ.எச்.அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கு 240 மாணவர்களும், அறபு இஸ்லாமிய கற்கைகள் பீடத்திற்கு 165 மாணவர்களும், கலை, கலாசார பீடத்திற்கு 246 மாணவர்களுமாக மொத்தம் 651 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான அறிவுறுத்தல் கூட்டம் பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
புதிய மாணவர்களுக்கான ஆங்கிலம், கணினித் தொழில்நுட்பம் போன்ற உள்ளக கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment