Header Ads



2010/2011 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் ஒதுக்கீடு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் 2010 - 2011ம் கல்வியாண்டில் 4445 மாணவர்கள் பட்டப்படிப்புகளுக்கென அனுமதிக்கப்படுவர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்கான மேலதிக செயலாளர் கலாநிதி.பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 1100 பேரும், 
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 990, 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 1535, 
திருகோணமலை வளாகத்திற்கு 120, 
சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கை நிறுவனத்திற்கு 230, 
வவுனியா வளாகத்திற்கு 275, 
ராமநாதன் நுண்கலைக் கல்லூரிக்கு 195 பேரும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, அடுத்த கல்வியாண்டில் நாடளாவிய ரீதியில் உள்ள 15 தேசிய பல்கலைக்கழகத்திற்கு 22500 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். அத்தோடு இவர்களுள் கூடுதலானோர் பேராதனை பல்கலைக்கழத்திற்கு அனுமதிக்கப்படுவர். 

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு 2525 பேரும், 
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு 2380 பேரும், 
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 1925 பேரும் அனுமதிக்கப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.