லண்டனில் இப்படியும் நடந்தது...!
உலகம் முழுவதும் உள்ள இன்றைய பெரும்பாலான இளைஞர்களிடம் ஐபாட், ஐ போன் இல்லாமல் இருப்பதில்லை. இவைகள் இளைஞர்களின் நேரத்தை வீணாக்கினாலும் ஒரு சில நேரங்களில் தக்க நண்பனாக இருந்து உதவி செய்கிறது.
அந்தவகையில் லண்டனை சேர்ந்த இளைஞர் கிரிஸ் கோர்பீல்டு. இவர் எப்போதும் ஐ போனுடனே காணப்படுவார். இந்த நிலையில் இவரின் ஐ போன் பெண் நண்பரின் பிரசவத்திற்கு உதவி செய்துள்ளது.
இவரின் பெண் நண்பர் ஜென்னி விசர். இவர் நிறைமாதகர்ப்பிணியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.டாக்டரிடம் கூட்டிச் செல்ல நினைத்தால் வெளியே செல்லமுடியாத அளவிற்கு பனிபொழிந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து கிரிஸ் தன்னிடம் இருந்த ஐபோன் மூலம் இனடெர்நெட் கனெக்சன் தந்து அதில் குழந்தை பிறப்புகுறித்த இணையதளத்தை தொடர்பு கொண்டார். அதில்கூறியபடி நண்பர் ஜென்னிக்கு உதவி செய்தார். முடிவில் அழகான குழந்தை பெர்ரிஜா பிறந்தது.
தக்க சமயத்தில் உதவி செய்த ஐபோனுக்குதான் இந்த நன்றி என கிரிஸ் கூறியதாக இங்கிலாந்தில் வெளி வரும் சவுத்போர்ட்டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment