பேசும் படங்கள். பகுதி - 16
சூடான், கார்டோம் விமான நிலையத்தில் அந்நாட்டின் அதிபர் ஒமர் அல் பசிர், எகிப்தின் அதிபரான கோஸ்னி முபாரக்கை வரவேற்றார்.
துருக்கி இஸ்தான்புலில் அதிபர் அப்துல்லா குல்(இடது), ஈராக் நாட்டை சேர்ந்த ஜலால் தலாபனி வரவேற்றார்.
பராகுவேயில் நடந்த அரசு ஊழியர்கள் ஆண்டு இறுதி கூட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் பெர்னான்டோ லுகோ மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்.
பிரிட்டீஸில் விமான நிலையத்தின் தலைமை அலுவலக அதிகாரி கோலின் மேத்திவ்ஸ்(மத்தியில்), பிரிட்டீஸின் போக்குவரத்து அமைச்சர் பிலிப் ஹெமண்ட்டுடன் சேர்ந்து, விமான நிலையத்தில் குளிர் காரணமாக ஏற்ப்பட்ட மாற்றங்களை படத்தில் பார்க்கிறார்.
ஜெனிவா நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஆல்பா கோண்ட்(மத்தியில்), ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.
கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் முனம் கரும்புகளுடன் ஆர்பாட்டம் செய்தனர். சாலை மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த கரும்புகளை அப்படியே விட்டுச் சென்றதால், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் எடுத்துச் செசன்றனர்.
அரியானா மாநிலம் குர்கானில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது.தலையில் பானையை வைத்து ஓடும் போட்டியில் பங்கேற்ற பெண்களை படத்தில் காணலாம்.
சந்திர கிரகணம் நேற்று ஏற்பட்டது.சில நாடுகளில் மட்டும் இதை காணமுடிந்தது. மெக்சிகோ நாட்டில் சந்திர கிரகணம் ஏற்பட்டதை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துள்ளனர்.சந்திரனை பூமியின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்த காட்சி.








Post a Comment