Header Ads



இவ்வருடத்தில் 105 ஊடகவியலாளர்கள் படுகொலை


இவ்வருடம் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்வடைந்துள்ளதாக ஊடகக் கண்காணிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் கொல்லப்படுதல் "எல்லையின்றி தொடருவதாகத் தெரிவித்துள்ள ஊடகக் கண்காணிப்புப் பிரிவான எம்லெம் கம்பெயின் இவ்வாண்டில் மாத்திரம் 105 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 கடந்த வருடம் 122 ஊடகவியலாளர்களும் 2008 ஆம் ஆண்டில் 91 ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

 ஊடகவியலாளரைப் படுகொலை செய்தல் தடுக்க முடியாத வன்முறையாகி வருவதுடன், ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச சமூகம் சரியான நடவடிக்கைகளையெடுக்கவோ அல்லது சரியான தீர்வை ஏற்படுத்தவோ இல்லையென ஊடகக் கண்காணிப்புப் பிரிவின் செயலாளர் ஜெனரல் பிளைஸ் லாம்பென் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் ஊடகவியலாளர் பணியாற்றுவதற்கு மிக ஆபத்தான நாடுகளாக மெக்ஸிக்கோ மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இனங்காணப்பட்டன.அத்துடன், மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற போதைக்குழுவினரிடையிலான போர்களில் 14 ஊடகவியலாளர்களும் பாகிஸ்தானில் பல்வேறு வழிகளில் 14 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் ஆப்கானிஸ்தான் எல்லையில் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 5 வருடங்களில் 529 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.அத்துடன், ஊடகவியலாளர் பணியாற்றுவதற்கான ஆபத்துமிக்க நாடாக ஈராக் உள்ளதுடன், அங்கு 5 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்குச் சரியான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென ஊடகக் கண்காணிப்புப் பிரிவின் தலைவர் ஹெடாஜற் அப்டெல் நபி தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.