மீண்டும் உயிர்ப்பெற்றது
பிரபல தொடர்பாடல் சேவையான ஸ்கைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இன்று உலகம் முழுவதிலுமுள்ள ஸ்கைப் பாவனையாளர்கள் அதனை இயக்க முடியாத நிலயேற்பட்டது.
இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு ஸ்கைப் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment