Header Ads



பேஸ்புக் vs ஜீமெயில் மோதல் ஜெயிக்கப்போவது யாரு..?











இணையத்தள உலகில் இன்று புதியதொரு புரட்சி ஏற்படப்போகிறது. ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சென் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தப் புரட்சி ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூக வலைப்பின்னலில் ஜாம்பவானாக விளங்கிக்கொண்டிருக்கும் பேஸ்புக் (facebook.com)  மின்னஞ்சல் சேவை ஜாம்பவான்களில் ஒன்றான ஜிமெயில் (gmail.com) ஆகியவற்றுக்கிடையில் சில வாரங்களாக முறுகல் நிலை தோன்றியது. அதனால் ஜிமெயிலை வழங்கும் கூகுள் (google.com) நிறுவனம் பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் வழங்கும் சேவைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதேவேளை, மற்றுமொரு மின்னஞ்சல் ஜாம்பவான் என அழைக்கப்படும் யாகூ (yahoo.com) மற்றும் ஆஸ்க்.கொம் (ask.com) ஆகியன பேஸ்புக் வலைப்பின்னலுடன் கைகோர்த்துள்ளன.

இந்த நிகழ்வானது ஜிமெயிலுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்தது. பெரும் எண்ணிக்கையிலான இணையப் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட கூகுள் நிறுவனம் அடுத்ததாக என்ன செய்யப்போகிறது எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் தான் இந்த மாபெரும் புரட்சி ஏற்படப்போகிறது.

ஆம்!பேஸ்புக் சமூக வலைப்பின்னல் இணைத்தளமானது தனக்கென தனியான ஈமெயில் வசதியினை இன்று அறிமுகப்படுத்தப் போகிறது. அதாவது nnnn@facebook.com என அந்த மின்னஞ்சல் முகவரி அமையும்.

இந்தத் தகவலை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பேஸ்புக் சமூக வலைப்பின்னலில் 500 மில்லியன் பயனாளிகள் இணைந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத கணக்கெடுப்பின் பிரகாரம் ஹொட் மெயிலுக்கு 361.7 மில்லியன் பயனாளிகளும் யாகூ மற்றும் ஜிமெயிலுக்கு முறையே 271.3 மில்லியன், 193.3 மில்லியன் பயனாளிகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.