வடக்கில் சிறந்த புத்திஜீவிகள் உருவாக வேண்டும் - நாமல்
வட மாகாணத்தில் சிறந்த புத்திஜீவிகளும், அரசியல் தலைவர்களும் உருவாக வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாமல் ராஜபக்ஸ எம்.பி. யுமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக குடாநாட்டின் நான்கு முக்கிய வீதிகளை புனரமைத்து செப்பனிடும் பணிகள் இன்று ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தின் தேசிய வீதி அபிவிருத்தி வேலைகள் ஜனாதிபதியும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று யாழ் குடாநாட்டின் 4 முக்கிய வீதிகளுக்கான புனரமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தள்ளார்.

Post a Comment