Header Ads



Exclusive News வடக்கு முஸ்லிம்களே சொந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற தயாராகுங்கள் - ஜனாதிபதி மஹிந்த






வடக்கு முஸ்லிம்களே உங்களின் சொந்தப் பிரதேசத்தில் மீளக்குடியேற தயாராவிருங்கள். விரைவில் உங்களை மீளக்குடியேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வடக்கு முஸ்லிம்களின் 20 வருட வெளியேற்றத்தை நினைவுகூறும் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மஹிந்த ராஜபக்ஸ அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது,

உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளில் தமிழா, சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடு காட்டக்கூடாது. இங்குள்ள தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் அகதிகளுக்கு சேவையாற்றும் போது இன வேறுபாடுகளுடன் நோக்காது உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகள் என்ற நோக்கில் சேவையாற்ற வேண்டும்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகள் அனைவரையும் மீளக்குடியேற்ற வேண்டிய பொறுப்பு எமது அரசுக்கு உள்ளது.  அதனடிப்படையில் அனைவரையும் மீளக்குடியேற்ற நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். வடக்கு முஸ்லிம்களாகிய நீங்களும் உங்கள் சொந்தப் பிரதேசங்களில் மீளக்குடியேற தயாராகவிருக்கவேண்டும்.

என்னுடைய அமைச்சரவையில் வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த அகதி ஒருவர் அமைச்சராக இருப்பதையிட்டு தான் பெருமையடைவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.