மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு சர்வதேச சமூகம் உதவவேண்டும்

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அரசாங்கமும், சர்வதேச சமூகமும் உதவி புரிந்துள்ளதைப்போன்று அந்த மக்கள் மீளக்குடியேறும் போதும் அரசாங்கமும், சர்வதேச சமூகமும் உதவ வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் தொவித்தார்.
வடக்கு முஸ்லிம்களின் 20 வருட வெளியேற்ற ஞாபகார்த்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே அமைச்சர் றிசாத் இவ்வாறு தொவித்தார்.
அவர் தனது உரையின் போது மேலும் தெரிவித்ததாவது,
இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை கொண்டாடுவதற்கல்ல. இந்த நிகழ்வின் மூலமாக வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை சர்வதேச சமூகத்திற்கு வெளிக்காட்டி அரசாங்கத்திடமிருந்தும், சர்வதேச சமூகத்திடமிருந்தும் உதவிகளைப் பெறவேயாகும்.
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது உதவிசெய்த புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்ட முஸ்லிம்களுக்கு இங்கு நன்றி கூறுகிறேன்.
வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்கனவே அரசாங்கமும், சர்வதேச சமூகமும் உதவிசெய்துள்ள போதும், தற்போது மீளக்குடியேற ஆரம்பித்துள்ள வடக்கு முஸ்லிம்களுக்கும் தொடர்ந்து உதவ வேண்டுமென்பதே தமது கோரிக்கையாகும் என்றார்.
Post a Comment