Header Ads



BREAKING NEWS வடக்கு முஸ்லிம்களை திரும்பிச்செல்ல உத்தரவு

கடந்த 20 ஆண்டுகளாக புத்தளம் கொழும்பு நீர்கொழும்பு  அனுராதபுரம் போன்ற பிரதேசகளில் வாழ்ந்து வரும் 1 1ஃ2 லட்சம் வரையான வடமாகாண முஸ்லிம்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் சொந்த இருப்பிடம் திரும்பி தம்மை பதிவு செய்து கொள்ளவேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் வாக்காளர் இடாப்பிலிருந்து பெயர்கள் நீக்கப்படும் நிவாரணங்கள் நிறுத்தப்படும் என்ற மீள்குடியேற்ற  அமைச்சின் அறிவிப்பால் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பின் பிரகாரம் தற்போது வாழும் இடங்களிலிருந்து தங்கள் பெயர் விபரங்களை கத்தரித்து கொண்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று பதியுமாரும் அங்கு வாழுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது இதற்கு ரூபா 25 ஆயிரம் ரூபா தரப்படும் என்றும் தகர கொட்டகையொன்றை அல்லது குடிசை ஒன்றை அமைத்துக் கொண்டு வாழ்ந்தால் எதிர்காலத்தில் ஒரு வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

எனினும் இந்தச் செய்தியை எம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து ரவூப் ஹக்கீம், றிஸாத் பதியுதீன் மற்றும் கருணா ஆகியோருடன் நாம் தொடர்புகொள்ள முயன்று வருகிறோம். அவர்கள் தரும் விளக்கத்தை இப்பகுதியில் விரைவில் எதிர்பாருங்கள்.

No comments

Powered by Blogger.