மன்னாரில் ஹஜ்ஜுப் பெருநாள் விழா
வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆர்வமூட்டும் வகையில் மன்னாரில் நான்கு நாட்கள் ஹஜ்ஜுப் பெருநாள் விழாவை நடத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் தலைமையில் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஐந்தாவது வருடமாக நடைபெறும் இந்த ஹஜ் பெருநாள் விழா இம்முறை எதிர்வரும் 18, 19, 20, 21 ஆகிய தினங்களில் எருக்கலப்பிட்டியில் நடைபெறவுள்ளது.யுத்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு ஆர்வமூட்டும் நோக்கிலேயே இம்முறை இந்த ஹஜ் பெருநாள் விழா மிகக் கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் தெரிவித்துள்ளார் .
இந்தப் பெருநாள் விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வடமாகாண ஆளுநர் சந்திரசிறி கஜதீர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாகவும் நூர்தீன் மசூர் தெரிவித்துள்ளார்
Post a Comment