கொழும்பு முஸ்லிம்களுக்கு ஆபத்தா..??
கடந்த காலங்களில் சட்டவிரோதக் கட்டடங்கள் எனக்கூறி கொழும்பில் முஸ்லிம்களின் பல குடியிருப்புகள் அகற்றப்பட்டன .
தேர்தல் காலங்களில் அநேக முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே பரவலாக வாக்களித்து வருகின்றனர். இது கடும் போக்கு சிங்களவர்களுக்கு பெரும் சவாலாகவே கடந்த காலங்களில் அமைந்திருந்தது.
இந்நிலையில் கொழும்பு நகரை அழகுப்படுத்துகிறோம் என்ற அடிப்படையில் கொழும்பு வாழ் முஸ்லிம்களை அங்கிருந்து பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் கொழும்பிலிருந்து முஸ்லிம்களை பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் முஸ்லிம்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வாழ்ந்துவரும் நிலையில் கொழும்பு நகரிலுள்ள தமது குடியிருப்புகள் அகற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் என தெரிவிக்கின்றனர்.
நீண்டகாலமாக குறித்தப் பகுதிகளில் வசித்துவரும் தமக்கு முன்னைய காலங்களில் இருந்த அரசாங்கம் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கியிருந்த நிலையிலும் தம்மை அதிகாரிகள் அங்கிருந்து அகற்ற முயற்சிப்பதாக அந்த மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக ஆயிரக் கணக்கான குடும்பங்களை அங்கிருந்து அகற்றவேண்டியுள்ளதாக நகர அபிவிருத்தி சபைத் தலைவர் நிஹால் பெர்ணான்டோ அண்மையில் தெரிவித்துள்ளார்
கொழும்பு நகரில் சில முக்கிய மையப்பகுதிகளில் காணி உறுதிப்பத்திரங்கள் வைத்திருப்போரும்இ அரச காணிகளில் குடியிருப்போரும் அடங்கலாக சுமார் 60 ஆயிரம் குடும்பங்கள் இந்த அபிவிருத்தித் தி்ட்டத்தால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வெளியேற்றப்படும் மக்களுக்கு கொழும்புக்கு வெளியே உள்ள பிரதேசங்களில் குடியிருப்புகளை அமைத்துக்கொடுக்க அதி்காரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதிகாரிகளின் இந்த திட்டத்தால் குடியிருப்புகளை இழக்கும் அபாயத்திலுள்ள மக்களுக்கான சங்கத்தின் தலைவரான முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.சி.எம்.பதூர்தீன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனால் மக்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்படக்கூடாது என்றும் கூறினார்.
கொழும்பு கொம்பனித் தெரு பகுதியில் தாம் உட்பட பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வீட்டு குடும்ப விபரங்களை அதிகாரிகள் கேரித்துச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
Post a Comment