Header Ads



குர்பான் மாடுகளை அபகரித்த மேர்வின் மௌனம் காக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்

அராஜக நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா குர்பான் கொடுப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 70 க்கும் மேற்பட்ட மாடுகளை பலாத்காரமாக அபகரித்துச் சென்றுள்ளதாக முஸ்லிம் விடுதலை அமைப்பைச் சேர்ந்த முஜீபுர் ரஹ்மான் குற்றம் சமத்தியுள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமையே இச்சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும்இ குறித்த இடத்திற்கு ரவுடிகள் மற்றும் பொலிஸார் சகிதம் வந்த அராஜக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா குர்பான் கொடுக்கப்படவிருந்த மாடுகளை இவ்வாறு அபகரித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பல இலட்சம் ரூபாய் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்இ எனினும் இச்சம்பவம் குறித்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டும் அவர்கள் மௌனம் காத்து வருவதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரும்கூட முஸ்லிம் சமூர்த்தி அதிகாரி ஒருவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.