Header Ads



யாழ்ப்பாணம், நயினாதீவு, நாச்சிக்குடா, சாவகச்சேரி, முல்லைத்தீவு ஹஜ்பெருநாள் தொழுகையில் ஏராளமான மக்கள் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள்  ஹஜ் பெருநாளை சிறப்பான முறையில் கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பெரியகடை முஸ்லிம் பள்ளிவாசல், யாழ். முஸ்லிம் வட்டார நாவாந்துறை புதுப்பள்ளிவாசல், சாவகச்சேரி ஜும்மாப்பள்ளிவாசல், மண்கும்பான் சாட்டி புது பள்ளி வாசல்களில் பெருநாளையொட்டிய விசேட தொழுகைகள் இடம்பெற்றுள்ளன.

இப்பள்ளிவாசல்களில் பெருநாளையொட்டி இடம்பெற்ற ஜும்மா பிரசங்கத்தில் நாட்டில் வாழும் சகல இன மக்களும் கடந்த காலங்களை மறந்து ஐக்கியப்பட்டு சகோதர உணர்வுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டுமென வேண்டிக்கொண்டனர்.

தொழுகையைத் தொடர்ந்து ஏழை மக்களுக்கு உணவுப் பார்சல்களை வழங்கியதுடன், சகாத்தும் வழங்கப்பட்டன. நேற்றைய தினம் முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் பொருட்டு இந்து மற்றும் கிறிஸ்தவ நண்பர்களது இல்லங்களுக்கு சென்று சலாம் சொல்லி உறவுகளை பகிர்ந்து கொண்டதாக அறியவருகிறது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியக் கல்லூரியில் ஹஜ் பெருநாளையொட்டி சிறப்பு வழிபாடுகளும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நீண்ட காலத்துக்கு பின்னர் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நயினாதீவு, முல்லைத்தீவு, நாச்சிக்குடா பகுதிகளில் மீள்குடியமர்ந்த முஸ்லிம் குடும்பங்கள் ஹஜ் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

No comments

Powered by Blogger.