Header Ads



பன்றிக் காய்ச்சல் தொற்று அதிகரிக்கும் அபாயம்

இன்புலன்சா எனப்படும் பன்றிக்காயச்சல் (A H1 N1)  வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவிக்கின்றது. அதில் அதிகமான நோயாளர்கள் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் வைத்தியர் சுதத் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 22 நோயளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 5 பேரும் கண்டி மாவட்டத்தில் 4 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 3 பேரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் (A H1 N1)  வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்வதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.