Header Ads



367 முஸ்லிம் குடும்பங்கள் யாழில் மீளக்குடியமர்ந்தன

யாழ்ப்பாணத்தில் இதுவரை 367 முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளதுடன், ஏனைய யாழ் முஸ்லிம்களையும் விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவத் தயாராகவிருப்பதாக என்னிடம் முஸ்லிம் அமைப்புக்கள் உறுதியளித்துள்ளன. யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்படும் முஸ்லிம்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பிலான திட்டங்களை பிரதேச செயலாளர்களிடமிருந்து கோரியுள்ளேன்.

பிரதேச செயலாளர்கள் தமது திட்டங்களை முன்வைத்தவுடன், அவற்றை ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து யாழ் முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.