இலங்கையில் முதன் முதலாக தேயிலை வில்லை தயாரிப்பு

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக தேயிலை வில்லையைத் தயாரிப்பதில் இரத்தினபுரி நிறுவனம் ஒன்று வெற்றி கண்டுள்ளது.
இவ்வில்லைக்கு டீ பொட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வில்லையை தயாரிப்பதில் எவ்வித இரசாயனமும் பயன்படுத்தப்படவில்லை. ஒரு கோப்பைத் தேநீரைத் தயாரிக்க கோப்பையில் எடுக்கப்பட்ட சுடுநீரில் ஒரு வில்லையைப் போடுவது போதுமானது. நீரில் மண்டி விழாதபடியால் தேநீரை வடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
இப்புதிய வில்லையை அறிமுகப்படுத்துவதற்கான வைபவம் கொழும்பு 3 இல் உள்ள தேயிலைச் சபை கேட்போர் கூடத்தில் நாளை செவ்வாய்கிழமை மறுதினம் நடைபெறவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
Post a Comment