Header Ads



யாழ்ப்பாணம் வெளிவாரி பட்டதாரிகள் கவனத்திற்கு


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பட்டச்சான்றிதழ்கள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

பட்டம் பெற்றவர்கள் சான்றிதழ் கட்டணமாக 500 ரூபாவை பல்கலைக்கழக மக்கள் வங்கியில் செலுத்தி அதற்கான பற்றுச்சீட்டை வெளிவாரிப்பட்டப் பதிவுகள் மற்றும் பரீட்சைகள் அலகில் சமர்ப்பித்து தமது பட்டச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாமென பதிவாளர் அறிவித்துள்ளhh.

இம்முறை யாழ்ப்பாணப் பல்கலைககழக வெளிவாரி மாணவர்களில் 500 க்கும் அதிகமானவர்கள் கலைமாணி வணிகமாணி இசைமாணி மற்றும் நடனமாணி பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.