8 இலட்சம் வழக்குகளின் கதி...!
நாடு முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களில் எட்டு இலட்சம் வழக்குகள் தேங்கிக்கிடப்பதாக நீதியமைச்சு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நீதியமைச்சு அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர். இவற்றில் ஆகக்கூடுதலான வழக்குகள் மத்துகம நீதிமன்றத்தில் காணப்படுவதாகவும் அதன் எண்ணிக்கை 25 ஆயிரம் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு குவிந்து கிடக்கும் வழக்குகளை இரண்டு வருடங்களுக்குள் விசாரித்து முடிப்பதற்காக மேலதிக நீதிமன்றங்களை அமைப்பதற்கும் விசாரிக்கப்படாதிருக்கும் வழக்குகளை விசாரிப்பதற்காக மேலதிக நீதிபதிகளை நியமிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Post a Comment