காணிகளை இழந்தவர்கள் மீளப் பெறலாம்
தமது பாரம்பரிய மற்றும் சட்டபூர்வமாக பெற்றுக்கொண்ட காணிகளை கடந்த 30 வருடகால யுத்தத்தினால் இழந்த மக்கள், காணி அபிவிருத்தி அமைச்சினால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள பிம்சவிய திட்டத்தின் மூலம் அக்காணிகளை மீளப்பெற முடியுமெனஅமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீளக்குடியேறுவதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் அதிகம். இதனை நிவர்த்திக்கும் பொருட்டு நாம் புதிய திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்துள்ளோம்.
இதனடிப்படையில் காணிகளின் சட்டரீதியான உரிமையாளர்களை நாம் இனங்கண்டு,அஅவர்களின் காணி உரிமை ஆவணம் காணாமல் போயிருப்பின் அவர்களுக்கு காணி உரிமை சான்றிதழை வழங்குவோம். அதன்பின் அவர்கள் தமது காணியில் மீளக்குடியேற முடியும்.
பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், காணி ஆணையாளர் திணைக்களம், மற்றும் பதிவாளர் நாயகம் அலுவலகம் ஆகியவற்றில் கிடைக்கக்கூடிய ஆவணங்கள் மூலம் காணிகளின் உண்மையான உரிமையாளரை இனங்காண்பதற்கான நடவடிக்கை இதன்மூலம் வெற்றியளிக்குமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

Post a Comment