யாழ் பல்கலைக்கழக பொறியியற்பீட இணைப்பாளராக பேராசிரியர் ஹுல்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படவுள்ள பொறியியற் பீடத்தின் இணைப்பாளராக பேராசிரியர் எஸ்.ஆர்.எச்.ஹூல் உத்தியோகபூர்வமாக நியமனம் பெற்றுள்ளார்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 27ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரும்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியற்பீட உருவாக்கத்திற்கு இந்தியா எவ்வெவ் வழிகளில் உதவமுடியு மென பேராசிரியர் ஹூல் திட்ட அமுலாக்கல் அறிக்கையை வழங்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Post a Comment