முஸ்லிம்கள் யாழில் மீளக்குடியேற சிங்கள அரசு உதவவில்லை
யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது புலிகள் செய்த மிகப்பெரும் தவறாகும். இன்று அகதிகளாக வாழும் முஸ்லீம்களின் அடுத்த தலைமுறை சுமார் 20 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கு வெளியிலேயே வாழ்கிறது. அவர்கள் புலம் பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறைபோல் யாழ்ப்பாணத்திற்கு பார்வையாளராகவே வருவார்கள். முஸ்லீம்கள் மறுபடியும் குடியேறுவதற்குக் கூட சிங்கள அரசு எதையுமே செய்யவில்லை.
இவ்வாறு இலங்கை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் டென்மார்க் வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
Post a Comment